அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்
ADDED : 46 days ago
இயக்குனர் ஷங்கரின் மகள் மற்றும் நடிகை அதிதி ஷங்கர். இதுவரை கதாநாயகியாக விருமன், மாவீரன், நேசிப்பாயா , பைரவம் என சில படங்களில் மட்டுமே நடித்துள்ளனர். இந்த படங்கள் எதுவும் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை. இந்த நிலையில் அதிதி ஷங்கர் முழுக்க முழுக்க பெண் முதன்மை கதாபாத்திரம் உள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை ஈரம், குற்றம் 23 போன்ற த்ரில்லர் படங்களை இயக்கி பெயர் பெற்ற அறிவழகன் இயக்குகிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தடம், குற்றம் 23 ஆகிய படங்களை தயாரித்த ரீ தன் தயாரிப்பு நிறுவனர் இந்தர் குமார் தயாரிக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.