உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்

மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் வெளியீட்டிற்கு தயாராகிவிட்டாலும் சில பிரச்னையால் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

அடுத்து ட்ரம் ஸ்டிக் நிறுவனத்தின் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குகிறார் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மிஷ்கின் இயக்கியுள்ள டிரெயின், பிசாசு 2 ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸிற்கு தயாராக இருந்தபோதிலும் சில பிரச்னையால் முடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !