மீசைய முறுக்கு 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது
ADDED : 48 days ago
2017ம் ஆண்டில் ‛ஹிப் ஹாப்' ஆதி இசையமைத்து, இயக்கி, நடித்து வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'மீசைய முறுக்கு'. ஆதி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை மையப்படுத்தி ‛மீசைய முறுக்கு' படம் உருவாகி இருந்தது. இந்த படத்தின் மூலம் தான் ஆதி இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நாயகனாகவும், இசையமைப்பாளராகவும், சமயங்களில் இயக்குனராகவும் பயணித்து வருகிறார்.
சமீபத்தில் மீசைய முறுக்கு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என தகவல் வெளியானதைத் தொடர்ந்து இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த சுந்தர்.சியின் அவ்னி மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆதியும் இந்த பாகத்தை தயாரிக்கிறார்.