உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ?

அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ?

தெலுங்குத் திரையுலகத்தில் அதிக வாரிசு நடிகர்கள் உள்ள குடும்பம் நடிகர் சிரஞ்சீவியின் குடும்பம். அவரது மாமனார் தொடங்கி, சகோதரிகள் குடும்பம், அவரது குடும்பம் என நிறைய பேர் திரையுலகில் உள்ளனர்.

ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த வருடம் நடந்த போது, சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த் மகனான நடிகர் அல்லு அர்ஜுன் செய்த ஒரு பிரச்சாரத்தால் சர்ச்சை எழுந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் கடுமையாக எதிர்த்து வந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவருக்கு அல்லு அர்ஜுன் பிரச்சாரம் செய்தார். அந்த வேட்பாளர் அல்லு அர்ஜுனின் நெருங்கிய நண்பர்.

தேர்தல் முடிந்து பவன் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. அல்லு அர்ஜுன் பிரச்சாரம் செய்த அந்த வேட்பாளர் தோல்வியடைந்தார். அதன்பின் அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள்.

இதனிடையே, அல்லு அர்ஜுனின் பாட்டி சில தினங்களுக்கு முன் இறந்த போது பவன் கல்யாண் அவர்களது வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார். இன்று பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு அல்லு அர்ஜுன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதனால், இருவருக்குமான மனஸ்தாபம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !