கர்நாடக முதல்வரை சந்தித்த ராம்சரண்
ADDED : 46 days ago
நடிகர் ராம்சரண் தெலுங்கில் தற்போது பெத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் மைசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மைசூரில் தங்கியிருந்த கர்நாடக முதல்வரான சித்ராமையாவை மரியாதை நிமித்தம் நேரில் சந்தித்துள்ளார் ராம்சரண்.
இது குறித்து புகைப்படங்களுடன் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், தெலுங்கு நடிகர் ராம்சரண் பெத்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துவரும் நிலையில், மைசூரில் என்னை சந்தித்து உரையாடினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சரான சந்தோஷும் ராம்சரணை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.