உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி

பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி

1952ம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் உருவான படம் 'ராணி'. வீணை பாலச்சந்தர் நாயகனாகவும், பி.பானுமதி நாயகியாகவும் நடித்தனர். கதாநாயகியை மையமாகக் கொண்ட கதை. 1948ம் ஆண்டு ரீட்டா ஹேவொர்த் முக்கிய வேடத்தில் நடித்த 'தி லவ்ஸ் ஆப் கார்மென்' என்ற அமெரிக்கத் திரைப்படத்தைத் தழுவி 'ராணி' திரைப்படம் உருவாக்கப்பட்டது.

ஒரு நாட்டில் ராஜாவிற்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ராஜமுத்திரையாக பச்சை குத்தப்படுவது வழக்கம். பச்சை குத்தும் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவன் தங்கள் இனத்து பிள்ளைக்கு பச்சை குத்தி அதை ராஜாவின் மகள் போல் அரண்மணையில் விட்டுச் சென்று ராஜாவின் மகளை தன் மகள்போல் கடத்திச் செல்கிறான். உண்மையான இளவரசி பழங்குடியின மக்களோடு திரிகிறாள், பழங்குடியின பெண் ராணியாக வளர்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

பானுமதி இளவரசி வேடத்திலும், பாலசந்தர் அவளை காதலிக்கும் சிப்பாய் வேடத்திலும் நடித்தனர். எஸ்.வி.சுப்பையா, எம்.சரோஜா, வகாப் காஷ்மீரி, எம்.ஆர்.சந்தனம் மற்றும் பேபி சச்சு ஆகியோரும் அவர்களுடன் நடித்தனர். இந்த படம் ஹிந்தியில் தயாரானபோது அனூப்குமார் நடித்தார்.

அமெரிக்க படத்தில் இளவரசியாக நடித்தவர் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தை பார்த்த பானுமதி இப்படி நான் நடிக்க மாட்டேன் என்று முதலில் நடிக்க மறுத்து விட்டார். பின்னர் அவர் கேரக்டர் மாற்றப்பட்டு, அணியும் ஆடைகள் மாற்றப்பட்டு அதனை அவரிடம் காட்டிய பிறகே பானுமதி இந்த படத்தில் அழகாக உடையணிந்து நடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

இளந்திரயன், வேலந்தாவளம்
2025-09-02 16:51:43

the loves of carmen 1948... YouTube ல் colour filme ல் காணக் கிடைக்கிறது