பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன்
ADDED : 1 days ago
1963ம் ஆண்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய 'கற்பகம்' படத்தில் அறிமுகமானவர் கே.ஆர்.விஜயா. அறிமுகமானதில் இருந்து சரியாக 22 வருடங்களுக்கு பிறகு அதே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் கே.ஆர்.விஜயா நடித்த அவரது 200வது படம் 'படிக்காத பண்ணையார்' படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் சிவாஜி, வி.கே.ராமசாமி, ஜெயமாலா, அனுராதா, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன் வெளியான 'படிக்காத மேதை' படத்தை தழுவியே இந்த படம் உருவாகி இருந்தது.
கே.ஆர்.விஜயாவின் 100வது படமான'நத்தையில் முத்து' படத்தை இயக்கியவரும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 1973ம் ஆண்டு வெளிவந்தது.