உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ்

பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ்


ஜெமினி ஸ்டூடியோவில் ஆடிசன் மானேஜராக இருந்த கணேசன், சின்ன சின்ன கேரக்டர்களில் சினிமாவில் நடித்து வந்தார். இந்த காலகட்டத்தில் உருவான படம்தான் 'தாய் உள்ளம்'.

இதில் மனோகர், சித்தூர் வி. நாகையா, சி. வி. வி. பந்துலு, 'ஜாவர்ட்' சீதாராமன், சந்திர பாபு, எம். வி. ராஜம்மா, மாதுரி தேவி, கே. ஆர். செல்லம், 'நண்பர்' ராமசாமி, டி. பி. முத்துலட்சுமி மற்றும் ஜி. சகுந்தலா உள்ளிட்ட பலர் நடித்தனர். கே.ராம்நாத் இயக்கினார்.

1861ம் ஆண்டில் அதிகம் விற்பனையான நாவலான ஹென்றி உட் எழுதிய ஈஸ்ட் லின் -ன் நேரடித் தழுவல் இந்தப் படம். உமாச்சந்திரன் மற்றும் எஸ்.டி. சுந்தரம் ஆகியோரால் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்திற்கு நாகையா மற்றும் ஏ. ராமராவ் இசையமைத்துள்ளனர்.

கணவன் மீது சந்தேகப்படும் மனைவி, அந்த மனைவியை அடைய நினைக்கும் வில்லன். திடீரென வரும் கணவனின் இரண்டாவது மனைவி இப்படி போகிற கதை இது. இதில் அடுத்தவன் மனைவியை அடைய நினைக்கும் வில்லன் கேரக்டரில் நடிக்க டி.எஸ்.பாலையாவை அணுகினார்கள்.

இமேஜை கெடுக்கும் இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றால் 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டார் பாலைய்யா. படத்தின் பட்ஜெட்டே ஒண்ணறை லட்சம்தான் என்பதால் அதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் அப்போது சிறு வேடங்களிலில் நடித்த ஜெமினி கணேசனை வில்லன் ஆக்கினார்கள். இதற்காக அவர் பெற்ற சம்பளம் 4 ஆயிரம் ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !