தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை?
ADDED : 1 days ago
நடிகர் தனுஷ் தற்போது ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவரது 54வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் உருவாகிறது. இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது இந்த படத்தில் நடிக்க நடிகர், நடிகை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் ‛சிங்கப்பூர் சலூன், தி கோட்' ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.