தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்!
ADDED : 1 days ago
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் படங்கள் மற்றும் வெப் தொடரை தயாரித்து வருகிறார்.
தற்போது ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் மூலம் தெலுங்கில் மூன்று படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். முதல் படமாக ‛உப்பேனா' படத்தின் மூலம் பிரபலமான வைஷ்ணவ் தேஜூ கதாநாயகனாக வைத்து கார்த்திக் சுப்பராஜ் புதிய படம் தயாரிக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.