வாசகர்கள் கருத்துகள் (1)
பொண்ணுங்க பின்னாடி சுற்றும்போது இன்பநிதி, இப்போ அரியணையில் உட்கார்ந்த பின்னர் இன்பன் ஆஹா ஆஹா, கார்பொரேட் கலக்கல்
ரெட் ஜெயன்ட் மூவிஸை தொடங்கி விஜய் நடித்த ‛குருவி' படத்தை முதன் முதலாக தயாரித்தார் உதயநிதி ஸ்டாலின். அதன்பிறகு ‛ஆதவன், மன்மதன் அன்பு, ஏழாம் அறிவு, ஒரு கல் ஒரு கண்ணாடி' என தொடர்ந்து படங்களை தயாரித்து வந்தார். ‛ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் ஹீரோவாகவும் அவர் அறிமுகமானார்.
இந்த நிலையில் 2021ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி, அமைச்சர், துணை முதல்வரான பிறகு ரெட் ஜெயன்ட் மூவிஸில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது உதயநிதியின் மகனான இன்பன் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவிஸின் புதிய தயாரிப்பாளராகி இருக்கிறார். தான் பொறுப்பேற்ற பிறகு முதலாவதாக தனுஷ் நடித்துள்ள இட்லி கடை படத்தை வெளியிடப் போகிறார் இன்பம் உதயநிதி. இப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த தகவலை அந்நிறுவனம் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
பொண்ணுங்க பின்னாடி சுற்றும்போது இன்பநிதி, இப்போ அரியணையில் உட்கார்ந்த பின்னர் இன்பன் ஆஹா ஆஹா, கார்பொரேட் கலக்கல்