பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா?
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷனை வைத்து தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தாய்லாந்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு பைனான்ஸ் பிரச்னை காரணமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தை இயக்கித் தர, பர்ஸ்ட் காபி அடிப்படையில் 25 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாம் லைகா நிறுவனம். ஆனால் அந்த தொகையை கிளைமாக்ஸை நெருங்குவதற்கு முன்பே முடித்து விட்டாராம் ஜேசன் சஞ்சய். அதனால்தான் படப்பிடிப்பை தற்போது அவர் நிறுத்தி வைத்திருப்பதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.