உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி?

சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி?


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முதலாக நடித்துள்ள படம் ‛மதராஸி'. இப்படத்தில் அவருடன் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜூ மேனன், விக்ராந்த், சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். செப்டம்பர் 5ம் தேதியான நாளை இந்த படம் திரைக்கு வருகிறது. மேலும் கடந்த ஒரு வாரமாக மதராஸி படத்தின் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில், இதுவரை நான்கு கோடி வரை முன்பதிவு நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் கடைசியாக தான் இயக்கிய ‛தர்பார் , சிக்கந்தர்' போன்ற படங்கள் அதிர்ச்சி தோல்வியாக அமைந்து விட்டதால் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். நாளை திரைக்கு வரும் மதராஸி படத்திற்கு எப்படிப்பட்ட ஓப்பனிங் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !