அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா
ஒரு இடைவெளிக்குப் பிறகு 'காட்டி' படம் மூலம் வந்துள்ளார் நடிகை அனுஷ்கா. இந்தப் படத்தின் எந்த ஒரு புரமோஷனுக்கும் அவர் வரவில்லை. அவர் வராததன் காரணம் என்ன என்பது தெரியவில்லை. இருந்தாலும் அவருடைய முக்கிய நட்பு வட்டத்தில் உள்ள ஹீரோக்களிடம் படத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் சில பதிவுகளைப் போட வைத்துள்ளார்.
பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா டகுபட்டி ஆகியோர் பட வெளியீட்டிற்கு முன்பாக படத்தைப் பற்றி சில வார்த்தைகள் பதிவிட்டு படத்திற்கு புரமோஷன் செய்து கொடுத்துள்ளனர். பிரபாஸ், ராணா இருவரும் அனுஷ்காவுடன் 'பாகுபலி' படத்தில் நடித்தவர்கள். அல்லு அர்ஜுன் 'ருத்ரமாதேவி' படத்தில் அனுஷ்காவுடன் நடித்திருந்தார். அவர்களுக்குள் நல்ல நட்பு உண்டு. அனுஷ்கா செய்தாலும் கிடைக்காத ஒரு விளம்பரத்தை அவர்கள் செய்து கொடுத்துள்ளனர்.
படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் சுமாரான விமர்சனங்கள்தான் படத்திற்குக் கிடைத்து வருகிறது.