உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ?

'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ?

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமாவால் மற்றும் பலர் நடித்துள்ள 'மதராஸி' படம் இன்று வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் உள்ள மொத்த வசனங்களில் இரண்டு வசனங்கள் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளது.

இடைவேளையின் போது சிவகார்த்திகேயன் பேசும் 'முடிஞ்சா தொட்றா' வசனமும், படத்தின் வில்லன் வித்யுத் ஜமாவால் பேசும், “துப்பாக்கி எவன் கைல இருந்தாலும் வில்லன் நான்தான்டா' என்ற வசனமும் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் குறிப்பிட்டு பதிவு செய்யப்படுகிறது.

இடைவேளை வசனமான 'முடிஞ்சா தொட்றா' வசனம், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'துப்பாக்கி' படத்தின் இடைவேளை வசனமான 'ஐயாம் வெயிட்டிங்' என்பதை ஞாபகப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள்.

வில்லன் வித்யுத் பேசும், 'துப்பாக்கி எவன் கைல இருந்தாலும் வில்லன் நான்தான்டா' என்று பேசும் வசனம் கடந்த வருடம் இதே நாளில் விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படத்தில் சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியைக் கொடுப்பதை வைத்து ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். விஜய்யின் 65வது படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க வேண்டியது. ஆனால், அதன்பின் ஏஆர் முருகதாஸ் மாற்றப்பட்டு நெல்சன் அப்படத்தை இயக்கினார். அந்தப் படம்தான் 'பீஸ்ட்'.

விஜய் தன்னை புறக்கணித்த காரணத்தால் தான் 'மதராஸி' படத்தில் 'தி கோட்' படத்தில் விஜய், சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கி கொடுத்ததை விமர்சிக்கும் விதமாக வித்யுத்தை பேச வைத்திருக்கிறார் என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !