உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன்

‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன்

சென்னையில் விளையாட்டு தொடர்பான படங்களை வைத்து ‛ஸ்போர்ட்ஸ் பிலிம் பெஸ்டிவல்'' நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வந்த விளையாட்டு படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல ‛எப் 1' கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில், ‛‛எப் 1 கார் பந்தைய போட்டியில் இந்தியர்கள் இடம்பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இந்தியாவில் அதற்கான பார்வை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கார் பந்தையத்திற்கான டிராக்குகள் அதிகம் உள்ளன'' என்றார்.

தொடர்ந்து அவரிடத்தில் சமீபத்தில் வந்த ‛எப் 1' படத்தின் ரீ-மேக்கில் இங்கு யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛கண்டிப்பாக அஜித் தான், அதற்கு அவர் தான் பொருத்தமான நபர். நிறைய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது 50 வயதிலும் கார் ரேஸில் அவருக்காகன ஆர்வம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து பங்கேற்று வருகிறார். நானும் அவரும் 25 ஆண்டுகால நண்பர்கள். மோட்டார் ஸ்போர்ட்ஸை இந்தியாவில் அவர் பிரபலப்படுத்துகிறார். தற்போது அவரின் ரேஸ் குழுவில் நானும் பயணிக்கிறேன். இருவரும் இணைந்து வெற்றிக்கான யுக்திகளை செயல்படுத்துவோம்'' என்றார்.

சில மாதங்களுக்கு முன் ஹாலிவுட்டில் வெளியான படம் ‛எப் 1'. பிராட் பிட் முதன்மை வேடத்தில் நடித்தார். உலகளவில் வரவேற்பை பெற்ற இப்படம் இந்தியாவிலும் கிட்டத்தட்ட 90 கோடி வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !