பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
ADDED : 46 days ago
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்', கவுசிக் பெகல்லபதி இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமான 'கிஷ்கிந்தாபுரி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், கிஷ்கிந்தாபுரி செப்.,12ல் ரிலீசாகிறது. இந்தப் படத்தில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிரைலரில் அனுபமாவை பேய் உருவத்தில் காட்டி இருந்தது பலரை ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிலையில், ஹாரர் படம் பற்றி அனுபமா கூறுகையில், ‛‛எனக்கு ஹாரர் படங்கள் மிகவும் பிடிக்கும். நான் சின்ன வயதில் இருக்கும்போது ரகசியமாக பேய் படங்களைப் பார்ப்பேன். என் பெற்றோர் தூங்கச் சென்ற பிறகு, ஹாரர் படங்களைப் பார்ப்பேன். அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருட்டில் பார்ப்பேன்'' என்றார்.