பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன்
ADDED : 46 days ago
மதராஸி படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் பாகுபலி வில்லனான தெலுங்கு நடிகர் ராணா ஒரு கேரக்டரில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் துபாயில் நடந்த சைமா விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். தாங்கள் இணைந்து நடித்த காட்சிகள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.