உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி

நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி


நடிகை காஜல் அகர்வால் கார் விபத்தில் சிக்கியுள்ளார். அவர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெறுகிறார். அவர் காலமாகிவிட்டார் என சில சமூகவலைதளங்களில் தகவல் பரவின. இது குறித்து விசாரித்தால் இது வதந்தி. கவுதம் என்பவரை திருமணம் செய்த காஜலுக்கு இப்போது ஒரு மகன் இருக்கிறார். மும்பையில் வசிக்கிறார். திருமணத்துக்குபின் அவருக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டது.

தமிழில் கடைசியாக இந்தியன் 2வில் கமிட் ஆனார். அதில் அவருக்கான காட்சிகள் இல்லை. இந்தியன் 3ல் அவருக்கு நிறைய காட்சிகள் உள்ளதாக தகவல். தெலுங்கில் வெளியான 'கண்ணப்பா'வில் அம்மன் பார்வதியாக வந்தார். சமீபத்தில் கூட மாலத்தீவு சென்று கவர்ச்சியான போட்டோ வெளியிட்டார். அவருக்கு விபத்து எதுவும் நடக்கவில்லை. ஒரு சிலர் தவறான தகவலை பரப்புகின்றனர். சமீபத்தில் கூட அவர் சினிமா இயக்குனர் ஆகப்போவதாக தகவல் வந்தது. அதுவும் வதந்தி. யாரோ அவரை பற்றி தொடர்ச்சியாக தவறான தகவலை கிளப்பி விடுகிறார்கள் என அவர் தரப்பு சொல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !