உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி

சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்துக்கு ‛நூறுசாமி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் லப்பர் பந்து சுவாசிகா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நடிகை லிஜோமோலும் இருக்கிறார். 2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் பெரிய வெற்றி அடைந்தது. தெலுங்கிலும் நல்ல வசூலை ஈட்டியது. ஹிந்தியிலும் ரீமேக் ஆனது. அடுத்ததாக பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்தார் . அதுவும் வெற்றி.

இப்பொழுது மீண்டும் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கப் போகிறார். இந்த படத்தின் தலைப்பு ‛நூறுசாமி' என வைக்கப்பட்டுள்ளது. இது பிச்சைக்காரன் படத்தில் இடம் பெற்ற ஒரு பிரபலமான பாடலின் முதல் வரி. ஆகவே இது பிச்சைக்காரன் மூன்றாம் பாகமா அல்லது அந்த படத்துடன், கதையுடன் தொடர்புள்ள படமா என கேள்வி எழுந்துள்ளது. பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2வை விட பல மடங்கு பெரிய பட்ஜெட்டில் நூறுசாமி படம் உருவாகிறது. இன்று இயக்குனர் சசி பிறந்த நாள், ஆகவே படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !