உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ

அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ

சில மாதங்களுக்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமார் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்பதை ஆதிக் சமீபத்தில் உறுதி செய்தார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.

சில மாதங்களாக இந்த படத்தின் தயாரிப்பில் பல குழப்பங்கள் உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. ஆனால், இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தான் தயாரிக்கிறார். இம்மாத இறுதியில் அஜித் சென்னை திரும்புகிறார். அடுத்த மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கும் என்கிறார்கள். இந்த படத்தில் நடிப்பதற்காக மோகன்லால், ஸ்ரீலீலா ஆகியோரிடம் கால்ஷீட் தேதி வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் மற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !