துல்கர் சல்மான் படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே
ADDED : 106 days ago
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான். தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் வாய்ப்பு கிடைக்கும் போது நடித்து வருகிறார். சீதா ராமம், லக்கி பாஸ்கர் படத்திற்கு பின் தற்போது மீண்டும் தெலுங்கில் ஆகாசம்லோ ஒக்க தாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் தனது 41வது படத்திலும் நடிக்கிறார். இதை அறிமுக இயக்குனர் ரவி நெலகுடிதி என்பவர் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை வைத்து அவரின் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் முதன்முறையாக துல்கர், பூஜா இணைந்து நடிக்கின்றனர். இது ஒரு காதல் கதையில் தயாராகிறது. படப்பிடிப்பு நடக்கிறது.