பிளாஷ்பேக் : காமெடியனாக இருந்து வில்லனாக மாறிய கவுண்டமணி
ADDED : 46 days ago
கவுண்டமணி தனது ஆரம்பகால படங்களில் காமெடியனாகத்தான் நடித்து வந்தார். என்றாலும் அவரது கேரக்டர்களில் சிறிய அளவில் நெகடிவ் ஷேட் இருக்கும். என்றாலும் அவர் முழுமையான காமெடி நடிகராக மாறி நடித்த முதல் படம் 'ராஜாத்தி ரோஜாக்கிளி'. இந்த படத்தில் சுரேஷ், நளினி, ராஜேஷ் உட்பட பலர் நடித்திருந்தார்கள். கவுண்டமணி வில்லனாக நடித்ததோடு அனுராதா உடன் ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பார்.
இதை தொடர்ந்து முள் இல்லாத ரோஜா, 16 வயதினிலே, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், எங்க ஊரு ராசாத்தி, பாட்டுக்கு நான் அடிமை, ஞானப்பழம், ரகசிய போலீஸ், பெயர் சொல்லும் பிள்ளை, ஆவாரம்பூ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தார்.
இவற்றில் ஒரு சில படங்கள் தவிர மற்ற படங்களில் அவர் காமெடி வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.