ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன்
ADDED : 4 days ago
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் வித்யாசாகர். இந்நிலையில் அவரது மகன் ஹர்ஷவர்தன், சிபி சத்யராஜ் நடிக்க இருந்த 20-வது படத்தில் இசையமைப்பாளராக கமிட்டானார் . ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது திடீரென்று ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார் ஹர்ஷவர்தன். லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தில் ஹர்ஷவர்தன் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார். இந்த படமும் கார்த்தி நடிப்பில் ஏற்கனவே லிங்குசாமி இயக்கிய பையா படத்தை போன்று ரொமான்டிக் ரோடு டிராவல் கதையில் உருவாகிறதாம். தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது.