உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா

கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா

நடிகர் ரவி மோகன் நேற்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், தனது ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் யோகிபாபு நடிப்பில் தான் தயாரித்து இயக்கும் ஆன் ஆர்டினரி மேன் என்ற படத்தின் பிரமோ வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் பாடகி கெனிஷா, ரவி மோகன் பியானோ வாசிக்கும் ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு அவரை வாழ்த்தி இருக்கிறார். அந்த பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆர்.எம். நீயாக இருப்பதற்கு நன்றி. தொந்தரவு செய்யாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் அன்பையும் மரியாதையையும் வழங்குவதில் தடையின்றி இருப்பதற்கு நன்றி. கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள் என்று பதிவிட்டுள்ளார் பாடகி கெனிஷா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !