மேலும் செய்திகள்
இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம்
2 days ago
வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன்
2 days ago
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அனுஷ்காவின் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் காட்டி. அனுஷ்காவுடன் விக்ரம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்தார். கிரிஷ் இயக்கினார். இப்படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு மூன்று முறை அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த தேதிகளை மாற்றியவர்கள், இறுதியாக கடந்தவாரம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியிட்டார்கள். ஆனால் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அனுஷ்கா பங்கேற்கவில்லை.
காட்டி படத்திற்கான ஒப்பந்தம் போட்டபோதே ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டேன் என்று அனுஷ்கா கூறியிருந்தாராம். காட்டி படம் முதல் நாளில் இரண்டு கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாள் 1.5 கோடி வசூலித்தது. அதன்பிறகு லட்சங்களில் வசூலித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் 7.5 கோடி மட்டுமே இந்த படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. 50 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது. இதனால் இதுவரை அனுஷ்கா நடித்த படங்களில் இப்படம் மிக மோசமான ஒரு தோல்வியை சந்தித்து இருப்பது தெரியவந்துள்ளது.
2 days ago
2 days ago