புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன்
திருமணத்துக்கு பிறகு பல படங்களில் சிம்ரன் நடித்தபோதும் சசிகுமாருக்கு ஜோடியாக அவர் நடித்த டூரிஸ்ட் பேமிலி படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் அவரது மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அடுத்தபடியாக அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பதில் ஆர்வம் கட்ட தொடங்கி இருக்கிறார் . இந்த நேரத்தில் புதிய பட நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார் சிம்ரன். அந்த நிறுவனத்துக்கு போர் டி மோஷன் பிக்சர்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த தனது புதிய நிறுவனத்தின் சார்பில் ஆக்ஷன் திரில்லர் கதையில் ஒரு புதிய படத்தை தயாரிக்கும் சிம்ரன் அதில் தானே கதையின் நாயகியாக நடிக்கிறார். புதுமுக இயக்குனர் ஷியாம் என்பவர் இயக்குகிறார். அதோடு இந்த நிறுவனத்தில் தயாராகும் படங்களில் தான் நடிப்பது மட்டுமின்றி, அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் சிம்ரன்.