உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம்

இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம்

கயல் வின்சன்ட், டி.ஜே பானு மற்றும் பெரும்பான்மையான ஈழத்திரைக் கலைஞர்களும், இந்தியக் கலைஞர்களும் இணைந்து நடிக்கும் “அந்தோனி” படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இது குறித்து படக்குழு கூறுகையில், ‛‛ஈழத்தமிழ் சினிமாவுக்கு இளையராஜா இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து அவரை அணுகினோம். கதையைக் கேட்டதும் எந்தவித மறுப்புமின்றி ஒத்துக்கொண்டார். அதேவேளை படத்தையும் பார்த்து உடனே பட வேலைகளை தொடங்கினார்.

யாழ்ப்பாணத்தில் உருவாகும் ஒரு காதல் கதைக்களத்திற்கு இளையராஜா இசையமைப்பதும், ஒரு ஈழத்திரைப்படத்திற்கு இசையமைப்பதுவும் இதுவே முதல் தடவை. அந்தோனி படம் இளையராஜாவின் 1524வது திரைப்படமாகவும், ஈழத்தின் முதற்படமாகவும் வரலாற்றில் பதிவாகிறது. தனது 82 வயதிலும் 1500 படங்களை தாண்டி, 8000 பாடல்களுக்கும் மேலாக இசையமைத்தவரின் பொன்விழா ஆண்டில், ஈழ படத்துக்கு இசையமைத்தது மகிழ்ச்சி. விரைவில் பாடல் வெளியீட்டுவிழா நடக்க உள்ளது' என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !