உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

தமிழில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா மொத்வானி. சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோகைல் கத்துரியா என்பவரை 2022ல் திருமணம் செய்து கொண்டார்.. இன்னொரு பக்கம் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மொத்வானிக்கும் 2020ல் முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக 2022ல் கணவரிடம் இருந்து பிரிந்து தனியே வாழ்கிறார் முஸ்கான் நான்சி ஜேம்ஸ்.

இந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து ஹன்சிகா, அவரது தாயார் ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக கடந்த ஜனவரியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் முஸ்கான் நான்சி ஜேம்ஸ். இந்த புகாரை தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு பிரிவுகளில் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஜாமின் கிடைத்தது

அதேசமயம் இந்த வழக்கு தன் மீது வேண்டுமென்றே தொடுக்கப்பட்டிருப்பதாக கூறி இதனை தள்ளுபடி செய்ய வேண்டுமென மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் ஹன்சிகா. இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஹன்சிகாவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனை தொடர்ந்து ஹன்சிகா இந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !