உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா

நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா

தமிழ், தெலுங்கில் புதிய பட வாய்ப்புகள் இல்லாத தமன்னா ஹிந்தியில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலித்து வந்த தமன்னா அவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டு பிரேக் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தான் நடித்துள்ள டு யூ வான்னா பார்ட்னர் தொடரை நடிகை டயானா பென்டியுடன் விளம்பரப் படுத்தும்போது, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் தமன்னா.

அவர் கூறுகையில், நான் ஒரு சிறந்த வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன். அதுதான் எனது தற்போதைய வாழ்க்கையின் இலக்கு. அதோடு கடந்த காலங்களில் சில நல்ல கர்மாக்களை செய்ததாக உணரும் வாழ்க்கை துணையாக இருக்க நான் விரும்புகிறேன். அந்த அதிர்ஷ்டசாலி யாராக இருந்தாலும் அதற்காக கடுமையாக உழைக்கிறேன். எனது திருமண வாழ்க்கை குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று தெரிவித்திருக்கிறார் தமன்னா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

சூரியா
2025-09-14 06:40:33

என்னது! இவரை மணந்து கொள்ளப் போகிறவர் அதிர்ஷ்டசாலியா? தியாகி என்றல்லவா சொல்லவேண்டும்!