கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு
ADDED : 104 days ago
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளார்கள். ஆனால் இந்த நேரத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவரை அவர் இரண்டாவது திருமணம் செய்திருப்பதோடு, அவரை விட்டு பிரிந்துள்ளார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் மீது போலீசில் புகார் அளித்தார் ஜாய் கிரிசில்டா.
இந்த நிலையில் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், கருவிலே உயிர் உருவாகும் போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது. நான் உள்ளே துடிக்க, நீ வெளியே தப்பிக்கிறாய். இதுதானா உன் அன்பு அறிமுகம் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார் ஜாய் கிரிசில்டா.