உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு

‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனக்கென தனி பாணியில் படங்களை இயக்கி வருகிறார். அவரின் ஒவ்வொரு படத்திற்குமே ஒவ்வொரு விதமான வித்தியாச படைப்புகள் இருக்கும். அந்தவகையில் அவர் அடுத்து இயக்கி, நடிக்கும் படத்திற்கு ‛‛நான் தான் சிஎம்'' என பெயரிட்டுள்ளார். அதோடு இந்தப்படம் 2026 ரிலீஸ் என குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில்,

பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே!

ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன். என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!

போடுங்கம்மா ஓட்டு ‛Boat' சின்னத்தைப் பாத்து!

இப்படிக்கு,
C. M . சிங்காரவேலன் எனும் நான்….
'சோத்துக் கட்சி'

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் இவரும் தன் பங்கிற்கு இப்படியொரு படத்தை வெளிக் கொண்டு வருகிறார். படத்தின் போஸ்டர், அவர் வெளியிட்ட பதிவுகளை பார்க்கையில் நிச்சயம் இந்தப்படம் அரசியல் பாணியில் தான் இருக்கும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !