நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு!
ADDED : 57 days ago
'தசரா' பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் நானி 'தி பாரடைஸ்' படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் க்ளிம்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகரான மோகன் பாபு நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. இப்போது இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையாக மோகன் பாபு உடற்பயிற்சி செய்து வருகிறார் என அவரின் மகள் லஷ்மி மன்சு ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.