30 லிட்டர் தாய்பால் தானம் வழக்கிய விஷ்ணு விஷால் மனைவி
ADDED : 55 days ago
நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியும், பாட்மின்டன் வீராங்கனையுமான ஜூவாலா கட்டா திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஏப்.,22ம் தேதி பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
தனது குழந்தைக்கு போக, தனது தாய்ப்பாலை அது கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்க அவர் முடிவு செய்தார். அந்தவகையில் தாய்ப்பால் வங்கிகளுக்கு கடந்த 4 மாதங்களில் கிட்டத்தட்ட 30 லிட்டர் வரை தனது தாய்ப்பாலை அவர் தானமான வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‛‛உயிரை காப்பாற்றும் தாய்ப்பாலின் மகிமை அளப்பரியது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் வரம். அதை நீங்கள் செய்வதின்மூலம் ஒரு வீரருக்கான மதிப்பை பெறலாம்'' என்றார். ஜூவாலா கட்டாவின் தாய்ப்பால் தானம் குறித்து பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.