உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில்

எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில்


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் நடித்த ‛பரம் சுந்தரி' என்ற படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியானது. அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, எதிர்காலத்தில் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள் என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, மூன்று பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக கூறியிருந்தார். அதற்கான காரணம் கேட்டபோது, ‛‛இரண்டு பிள்ளைகள் என்றால் அவர்களுக்கிடையே சண்டை வரும். அதனால் அந்த சண்டையை விலக்கிவிட மூன்றாவதாக ஒருவர் தேவை. அதனால் தான் மூன்று பிள்ளைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்'' என்று அப்போது கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஹிந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக தற்போது ஜான்வி கபூர் நடித்துள்ள இன்னொரு படமான ‛சன்னி சன்ஸ் காரி கி துளசிகுமாரி' என்ற படம் செப்டம்பர் 2ம் தேதி வெளிவர உள்ளது. இந்தப் படம் திருமணம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ளது. இப்படம் குறித்த ஒரு நிகழ்ச்சியில், எப்போது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்? என ஜான்வி கபூரிடத்தில் கேட்கப்பட்ட இன்னொரு கேள்விக்கு, ‛‛இப்போது என்னுடைய திட்டம், எண்ணம் எல்லாமே சினிமாவை பற்றி மட்டுமே உள்ளது. திருமணத்தைப் பற்றி திட்டமிடவே இல்லை. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது'' என்று கூறியுள்ளார் ஜான்வி கபூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

ஆனந்த் தூத்துக்குடி
2025-09-16 18:59:14

பதில் ஏற்புடையதாகவே இருக்கிறது