ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா?
ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹுமா குரோசி. இவர் தமிழில் ரஜினி நடித்த ‛காலா', அஜித் நடித்த ‛வலிமை' போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் ஐந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த ‛பயான்' என்ற படம் சமீபத்தில் டொரான்டாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இந்நிலையில் பாலிவுட்டில் உள்ள சினிமா பிரபலங்களுக்கு நடிப்பு பயிற்சியாளராக இருக்கும் ரஹித் சிங் என்பவரை ஹுமா குரோஷி காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது காதலர் ரஹித் சிங்குடன் ஹுமா குரோஷியின் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்று இருப்பதாக பாலிவுட் மீடியாக்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. என்றாலும் இந்த செய்தியை ஹுமா குரோஷி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அவர் இது குறித்து விளக்கம் கொடுக்கும்போது தான் இந்த செய்தி உண்மையா? இல்லை வதந்தியா? என்பது தெரியவரும்.