உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட்

ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட்


ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா இணைந்து நடித்துள்ள படம் ‛கருப்பு'. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், பின்னர் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறினார்கள். ஆனால் இப்போது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்கிற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது போன்ற செய்திகள் சூர்யா ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஆனால் இந்த நேரத்தில் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இருந்து இன்னொரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், இந்த கருப்பு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து தற்போது இசை அமைப்பாளர் சாய் அபயங்கர் பின்னணி இசைப் பணிகளை தொடங்கி விட்டார். அதனால் இந்த படம் பொங்கலுக்கு முன்பே கூட வெளியாகும் என்கிறார்கள். ஆயுத பூஜை அன்று இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அப்டேட் வெளியாகும் என்றும் கூறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !