உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா

2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா


‛அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியவர் மீனா. தமிழ், மலையாளம், தெலுங்கு என 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் வித்யா சாகர் என்பவருக்கும் கடந்த 2009ல் திருமணம் ஆனது. இவர்களுக்கு நைனிகா என்கிற மகள் இருக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் வித்யா சாகர், நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். அப்போதிருந்தே, மீனா 2வது திருமணம் செய்யப்போவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்தன. இதற்கு மீனாவும் மறுப்பு தெரிவித்து வந்தார். தற்போது இதுப்பற்றி பேசியுள்ள மீனா, ‛‛என் கணவர் இறந்ததும் நான் இன்னொரு திருமணம் செய்துகொண்டதாக வதந்திகள் பரவின. இதனால், நானும் என் குடும்பமும் கடுமையான மனவேதனைக்கு ஆளானோம். இரண்டாவது திருமணம் செய்ய விருப்பமில்லை. இப்போது, என் கவனமெல்லாம் என் மகள் நைனிகா மீதுதான்'' எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !