25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி'
ADDED : 54 days ago
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா, விவேக், மும்தாஜ், விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த ‛குஷி' படம் செப்டம்பர் 25ல் ரீ ரிலீஸ் ஆகிறது. முன்பு விஜய் நடித்த ‛கில்லி' ரீ ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. அடுத்து சச்சின் ரீ ரிலீஸ் ஆகி வசூல் அள்ளியது. இப்போது குஷி ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படமும் வெற்றி பெற்றால் விஜய் நடித்த படங்கள் ரீ ரிலீசில் ஹாட்ரிக் அடித்த சாதனை படைக்கும்.
அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும், காதல் காட்சிகளும் பெரிய ஹிட் ஆகின. அதனால் 25 ஆண்டுகளுக்குபின் படத்தை வெளியிட உள்ளார்கள். ஜனநாயகன் படத்துக்குபின் விஜய் நடிப்பதை நிறுத்திவிட்டதால் இனி அவரின் பழைய படங்கள் அடிக்கடி ரீ ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் அமர்களமும் மீண்டும் வெளியாக உள்ளது.