உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மிராய்' நாயகன், இயக்குனருக்குக் கார் பரிசு

'மிராய்' நாயகன், இயக்குனருக்குக் கார் பரிசு

கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ், ஸ்ரேயா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தெலுங்குப் படம் 'மிராய்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் 100 கோடி வசூலை நெருங்கியுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் தரமாகத் தயாராகி வெளிவந்து பலரின் பாராட்டுக்களை இப்படம் பெற்று வருகிறது.

நேற்று இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத், படத்தின் நாயகன் தேஜாவுக்கும், இயக்குனர் கார்த்திக்குக்கும் கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அவர்களுக்குப் பிடித்த கார் எதுவாக இருந்தாலும் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார். இதை மகிழ்வுடன் இருவரும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழ் சினிமாவிலும் இப்படி கார் பரிசு வழங்குவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், சமீப காலத்தில் இப்படி எதுவும் நடக்கவில்லை. 'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்கு அதன் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் விலை உயர்ந்த காரைப் பரிசாக வழங்கினார். அதன்பின் வேறு எந்த தயாரிப்பாளரும் இப்படி அளிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2025-09-17 17:28:12

ஏதாவது ஒரு படம் உருப்படியா இருந்தா தானே தயாரப்பளார்க்கு லாபம் வந்தால் தானே ஒரு ஸ்கூட்டர் ஆவது வாங்கி தர் முடியும். இப்போ மாஸ் ஹீரோ எல்லாம் தாமஸ் ஹீரோ ஆயிட்டு வராங்க . நல்ல படங்களை பார்க்க மக்கள் திரும்பி விட்டார்கள் .. மாஸ் ஹீரோ கு எல்லாம் காஸ் (பணம்) தான் முக்கியம் இனி அவுங்க யோசிக்க வேண்டும்..