உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியிலிருந்து 'குட் பேட் அக்லி' நீக்கம் : யு-டியூபில் நீக்கப்படாத பாடல்கள்

ஓடிடியிலிருந்து 'குட் பேட் அக்லி' நீக்கம் : யு-டியூபில் நீக்கப்படாத பாடல்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில், அஜித் குமார், த்ரிஷா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'குட் பேட் அக்லி'. அந்தப் படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்து சூப்பர் ஹிட் பாடல்களான ''ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக் குருவி'' ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி இருந்தனர்.

தனது அனுமதி இல்லாமல் அந்தப் பாடல்களைப் பயன்படுத்தியதாக இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்தப் பாடல்களைப் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், ஓடிடி தளத்தில் இருக்கும் 'குட் பேட் அக்லி' படத்தில் அனுமதி பெறாத அந்தப் பாடல்களை நீக்காமல் இருந்தனர். உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத காரணத்தால் நீதிமன்ற அவமதிப்பு தொடருவோம் என இளையராஜா தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அந்தப் படத்தையே நீக்கியுள்ளனர்.

அதேசமயம் யு டியுப் தளத்தில் உள்ள 'குட் பேட் அக்லி' டிரைலரில் இடம்பெற்றுள்ள 'ஒத்த ரூபாய் தாரேன்' பாடல் இன்னும் நீக்கப்படவில்லை. அதையும் நீதிமன்ற உத்தரவுப்படி நீக்குவார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !