உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு

நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொது குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. இதில் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மேலும் தேசிய விருது பெற உள்ள ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஜிவி பிரகாஷ் ஆகியோரும் கவுரவிக்கப்பட உள்ளனர்.

காலை 8 மணிக்கு மருத்துவ முகாம் உடன் பொதுக்குழு தொடங்குகிறது. அதை தொடர்ந்து செயற்குழு கூட்டமும் பொதுக்குழுவும் நடக்கிறது. இதில் நடிகர் சங்க புது கட்டடம் திறப்பு விழா, புது கட்டிடத்திற்கு பெயர் சூட்டுதல், வரவு செலவுகள் சங்க பிரச்னைகள் விவாதிக்கப்பட உள்ளன.

சினிமா நடிகர்கள் வெளியூரிலிருந்து வரும் நாடக நடிகர்கள் என 3000 பேர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவில் நாடக நடிகர்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சி முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !