மலையாளத் திரையுலகத்தில் இதுவரையில் வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை இந்த வருடம் வெளிவந்த 'எல் 2 எம்புரான்' படம் வைத்திருந்தது. பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வந்த அந்தப் படம் 265 கோடி வசூலித்திருந்தது. அந்த சாதனையை சில மாதங்களே தக்க வைக்க முடிந்துள்ளது.
அதைத் தற்போது டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த 'லோகா சாப்டர் 1 சந்திரா' படம் முறியடித்துள்ளது. 267 கோடி வசூலை 23 நாட்களில் பெற்று இந்த சாதனையைப் புரிந்துள்ளது.
மலையாளத்தில் எத்தனையோ ஹீரோக்கள் நடித்திருக்க, ஒரு ஹீரோயின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு படம் இந்த சாதனையைப் புரிந்திருப்பது ஆச்சரியமான ஒன்று. தென்னிந்தியத் திரையுலகத்தில் வேறு எந்த ஒரு ஹீரோயின் நடித்த படமும் இந்த அளவிற்கு வசூலைக் குவித்ததில்லை.