உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்கோ 2ம் பாகத்தில் யஷ் நடிக்கவில்லை ; அவரது டீம் தகவல்

மார்கோ 2ம் பாகத்தில் யஷ் நடிக்கவில்லை ; அவரது டீம் தகவல்


மலையாளத்தில் கடந்த வருடம் மலையாளத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் ‛மார்கோ' என்கிற திரைப்படம் வெளியானது. ஹனீப் அதேனி என்பவர் இயக்கிய இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. அதேசமயம் இந்த படத்தில் அதீத வன்முறை காட்சிகள் நிறைந்திருந்தும் கூட இந்த சாதனையை செய்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. படத்தின் ஹீரோ உன்னி முகுந்தனும் அதில் நடிக்கப் போகிறேன் என்று முதலில் கூறியவர், பின்னர் இந்த படத்தில் தான் சந்தித்த நெகட்டிவிட்டி காரணமாக இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.

அடுத்ததாக அவர் பிரதமர் நரேந்திர மோடியின் சுயசரிதையில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் மார்கோ இரண்டாம் பாகத்திற்கு ‛லார்ட் மார்கோ' என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதில் கன்னட முன்னணி நடிகர் யஷ் நடிக்கிறார் என்கிற தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்றும் மார்கோ இரண்டாம் பாகத்தில் யஷ் நடிக்கவில்லை என்று அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கன்னடத்தில் உருவாகி வரும் ‛டாக்ஸிக்' என்கிற படத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் யஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !