மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
10 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
10 days ago
2025ம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு வாரா வாரம் நான்கைந்து படங்களாவது வெளிவந்து கொண்டிருக்கிறது. சில வாரங்களில் அது ஐந்து படங்களுக்கும் மேலாகவும் போய்க் கொண்டிருக்கிறது.
கடந்த வாரத்துடன் இந்த வருடத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கை 190ஐக் கடந்துள்ளது. அது இந்த வாரத்தில் 200ஐக் கடந்துவிடும் என்ற நிலையில் உள்ளது. இந்த வாரம் செப்டம்பர் 26ம் தேதி, “அந்த 7 நாட்கள், கயிலன், கிஸ் மீ இடியட், ரைட், குற்றம் தவிர், சரீரம், டோர் நம்பர் 420, பணை, ஐஏஎஸ் கண்ணம்மா' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
செப்டம்பர் 25ம் தேதி விஜய், ஜோதிகா நடித்த 'குஷி' படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இந்த வாரத்தில் இத்தனை படங்கள் வெளிவந்தாலும் அவற்றால் ஒரு சில நாட்கள் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். கடந்த இரண்டு வாரங்களில் வெளியான படங்களில் சில படங்கள் நன்றாக இருப்பதாக சொல்லப்பட்டாலும் தியேட்டர்களில் அவற்றிற்கு வசூல் இல்லை. அதோடு, இந்த வாரம் வெளியாகும் படங்கள் அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்.
அடுத்த வாரம் அக்டோபர் 1ம் தேதி தனுஷ் நடித்துள்ள 'இட்லி கடை' வர உள்ளதால் தான் இந்த வாரம் இத்தனை படங்கள் வெளியாகும் சூழல் உள்ளது. அக்டோபர் 17ல் தீபாவளி படங்கள் வெளியாக உள்ளதால் கிடைக்கும் இடைவெளியில் சிறிய படங்களை வெளியிட்டுவிடுகிறார்கள்.
10 days ago
10 days ago