மோகன்லாலுக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன்
மலையாள நடிகர் மோகன்லாலுக்கு 2023ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அறிவித்தது. மோகன்லாலுக்கு பல மொழி சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஹிந்தி நடிகரான அமிதாப்பச்சன் மோகன்லாலுக்கு மலையாளத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சி, மோகன்லால் ஜி. இது மிகுந்த மகிழ்ச்சி தரும் மிக உயர்ந்த அங்கீகாரம். உங்களுக்கு ஏராளமான வாழ்த்துகள். உங்கள் பணிக்கும் நேர்த்திக்கும் நான் மிகப் புதிய ரசிகன். உங்களது மிக முக்கியமான சில உணர்வுகளை மிக எளிமையாக படமாக்குவது குறிப்பிடத்தக்கது. உங்கள் வெற்றிகரமான திறமைகளால் எங்களை தொடர்ந்து கவருங்கள், எங்களுக்கான ஒரு பாடமாக இருக்க வாழ்த்துகள். மிகுந்த மதிப்பும் பெருமையுடனும் எப்போதும் ஒரு நேர்மையான ரசிகனாக இருந்து வருகிறேன். நமஸ்காரம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.