பிளாஷ்பேக்: 300வது படத்தை இசையால் தாலாட்டிய இளையராஜா
பாரதிராஜாவின் உதவியாளரான கே.ரங்கராஜ் இயக்கிய படம் 'உதயகீதம்'. ஆர்.செல்வராஜ் கதையை எழுதினார். தூக்குத்தண்டனைக் கைதி ஒருத்தன். அவனை ஒரு பொண்ணு லவ் பண்ணுகிறாள். போராடி, கல்யாணமும் பண்ணிக்கிறாள். முதலிரவுல் அவனைக் கொல்ல முயற்சி செய்கிறாள். ஏன் அவள் அப்படிச் செய்தாள் என்பதுதான் படத்தின் கதை.
கவுண்டமணியோட காமெடி, படத்துக்கு பெரிய பலம். அதுலயும் தேங்காய் வெடிகுண்டு மேட்டர் செம ஹிட்டாச்சு. நகைச்சுவைப்பகுதியை ஏ.வீரப்பன் எழுதியிருந்தார். மோகன், ரேவதி, லட்சுமி நடித்திருந்தனர்.
படத்தின் வெற்றிக்கு முழுமையானவர் இளையராஜா. அவரது 300வது படம் என்பதால் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருந்தார். 'சங்கீதமேகம்', 'தேனே தென்பாண்டி மீனே', 'உதயகீதம் பாடுவேன்', 'மானே தேனே கட்டிப்புடி', 'பாடுநிலாவே', 'எல்லோரும் பாட்டுப் பாடுங்கள்'னு எல்லாப் பாட்டுமே மிகப்பெரிய ஹிட்.
இந்த படம் வெளியானபோது மனோபாலா இயக்கிய 'பிள்ளைநிலா'. கமல் நடித்த 'காக்கி சட்டை', ரஜினி நடித்த 'நான் சிகப்பு மனிதன்' வெளியானது. எல்லாமே 100 நாள் படங்கள்தான். ஆனால் உதயகீதம் வெள்ளிவிழா படம்.