உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து

மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து


2023ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ள வாழ்த்தில், “ஒரு சக ஊழியரை விட அதிகமாக, என் சகோதரரும் பல வருடங்களாக இந்த அற்புதமான சினிமா பயணத்தைத் தொடங்கிய ஒரு கலைஞரும். தாதா சாகேப் பால்கே விருது ஒரு நடிகருக்கானது மட்டுமல்ல, சினிமாவை வாழ்ந்து சுவாசித்த உண்மையான கலைஞனுக்கானது. உன்னை பெருமையாகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன், லால். இந்த மகுடம் பெற உங்களுக்கு உறுதியான உரிமை உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி பதிவிட்டுள்ள வாழ்த்தில், ''என் அன்புக்குரிய லாலேட்டன், மிக மிகக் கவுரவமான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் சிறப்பான பயணமும் புரட்சிகரமான நடிப்பும் இந்திய சினிமாவை வளப்படுத்தியது. முற்றிலும் உரிமையான ஒரு அங்கீகாரம்'' எனப் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !