சாலைவாசிகளுக்கு போர்வை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்
ADDED : 48 days ago
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நேற்று இரவு சென்னை நகரின் சாலைகளில் படுத்துறங்கியவர்களுக்கு போர்வை வழங்கினார். பலரை தூக்கத்தில் இருந்து எழுப்பாமல் போர்வையை போர்த்திச் சென்றார்.
இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் நேற்று இரவு சாலையில் நடந்து சென்றேன். சாலையின் ஒரத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், குளிரில் நடுங்கிக் கொண்டும், கொசுக்களோடு போராடிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய முடிவு செய்தேன்.
ஒரு போர்வை 100 ரூபாய் வரும். இது பெரிய விஷயமில்லை, நீங்கள் 35 ரூபாய் கொடுத்தால் போதும் என்னால் இந்த பணியை தொடரமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.