உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மேலாளார் தாக்கப்பட்ட வழக்கு : நேரில் ஆஜராக உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன்

மேலாளார் தாக்கப்பட்ட வழக்கு : நேரில் ஆஜராக உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன்

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக அதுவும் கடந்த இரண்டு வருடங்களில் கிடுகிடுவென நடிகராகவும், ஒரு தயாரிப்பாளராகவும் வளர்ச்சி கண்டவர் உன்னி முகுந்தன். தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தும் தயாரித்தும் வந்த உன்னி முகுந்தன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மேலாளர் விபின் குமார் என்பவர், உன்னி முகுந்தன் தன்னை தாக்கியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து உன்னி மிகுந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த போலீசார் நீதிமன்றத்தில் இது குறித்த சார்ஜ் ஷீட்டை ஒப்படைத்தாலும் அதில் உன்னி முகுந்தன், விபின் குமாரை தாக்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனாலும் தற்போது இந்த வழக்கு வரும் அக்டோபர் 27ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் அன்றைய தேதி உன்னி முகுந்தன் காக்கநாடு ஜூடிசியல் முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !